நாசரேத் மகளிர் கல்வியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் எட்டு துறைகளுள் தமிழ்த் துறையும் ஒன்று. இத்தமிழ்த் துறையானது கல்லூரி தொடங்கப்பட்ட 2006-ஆம் ஆண்டு முதல் செம்மையாக செயல்பட்டு ஆண்டுதோறும் தமிழாசிரியைகளை உருவாக்கும் பணியில் செவ்வனே ஈடுபட்டு வருகின்றது.
தொலைநோக்குத் திட்டம்:
மாணவ ஆசிரியர்களின் கற்றல் அடைவினையும், கற்பித்தல் திறனையும் மேம்படுத்தி உலகளாவிய வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியினை ஏற்படுத்துதல்.
பணித்திட்டம்:
கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு தேவையான கற்றல் மூலங்களையும், அதற்கான வழிமுறைகளையும் அளித்து தலைமைப்பண்பு, முழுமையான ஆளுமையை வளர்த்தல்.
துறைசார் கலைத்திட்டம்:
தமிழ்த்துறையில் தாள்-ஒன்று மற்றும் தாள்-
அவற்றுள் இரண்டு (Optional I, II) இணைந்து மொத்தம் இருபது அலகுகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க அலகுகள் பின்வருமாறு:
துறைசார் தகவல்கள்:
மாணவ ஆசிரியர்கள் பல்வேறு விதமான பாட சார் செயல்களிலும், பாட இணை செயல்களிலும் ஈடுபட்டு தங்களின் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
பாடம்சார் செயல்கள்:
பாட இணை செயல்கள் கற்பித்தல் பொருட்கள் கண்காட்சி :
வருடந்தோறும் செயல்முறைத் தேர்வின் இறுதியில் மாணவ ஆசிரியர்களின் மாதிரிகள், சுழலட்டைகள், ளக்க அட்டைகள், மின்னலட்டைகள், வரைபடம், விளக்கப்படம், அறிக்கைகள் அனைத்தும் பள்ளி மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
துறைசார், வண்ணதினக் கொண்டாட்டம்:
இதில் துறைசார்ந்த பல்வேறு தகவல்களையும், கொடுக்கப்பட்ட வண்ணம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் மாணவ ஆசிரியர்கள், குறுநாடகம், நடனம், விளையாட்டுகள், விளம்பரங்கள், பாடல்கள் மூலம் அளிப்பார்கள்.
சமூகப்பயனுள்ள ஆக்கப்பணிகள்: (SUPW)
மேலும் மாணவ ஆசிரியர்கள், சமூகப் பயனுள்ள ஆக்கச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பானை ஓவியம், கண்ணாடி ஓவியம், பூக்கள் செய்தல், வீணானப் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்கள் செய்தல் ஆகியவை மூலம் தங்களின் ஆக்கத் திறனையும், கற்பனை ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றனர்.
போட்டிகள் :
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டிமன்ற விவாதம், ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவையும், விளையாட்டுப் போட்டிகள் பலவும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றது.
விழிப்புணர்வு பேரணி :
புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், புகையிலையின் தீங்கினை உணர்த்தும் கையிலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களுக்குத் துண்டு பிரசுரங்கள்
விநியோகிக்கப்பட்டது.
துறைசார் சாதனைகள் :
தமிழ்த் துறையைச் சார்ந்த சண்முகவல்லி தூய கிறித்தோபர்
கல்வியியல் கல்லூரியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு “சூழல் கேடயம்”
பெற்றாள்.
குறைதீர் கற்பித்தல்:
கற்றலில் குறைவுடையோருக்குத் திறன்மிக்க மாணவர்கள் மூலம் குறைதீர் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இப்பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. ஆண்டு இறுதித் தேர்வில் மாணவர்களின் முழுமையான தேர்ச்சிக்கு இம்முறை வழிகோலுகிறது.
விருந்தினர் உரை:
தமிழ்த்துறையில் அனுபவம் மிக்க பேராசிரியர்களால் கலைத்திட்டம் தொடர்பான தலைப்பில் அமைந்த கருத்துக்கள் சிறந்த முறையில் விளக்கப்படுகின்றது. இதனை மாணவர்கள்
ஆர்வமுடன் கவனித்தும், பயன் பெற்றும் வருகின்றனர்.
விரிவுரையாளர் மேம்பாடு:
வருடந்தோறும் பல்வேறு கல்லூரிகளில் நடைபெறும் பயிலரங்குகளிலும், கருத்தரங்குகளிலும் பங்கு பெற்று பல்வேறு கல்விசார் தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது.
வ.எண் |
பங்கேற்பு |
1 |
பயிலரங்கு – 3 |
2 |
கருத்தரங்கு – 3 |
கருத்தரங்கில் கட்டுரை படிக்கப்பட்டது-2
துறைசார் தனித்தன்மைகள்:
எதிர்காலத் திட்டம் :
தமிழ் மொழியின் முக்கிய திறன்களான கேட்டல், பேசுதல், எழுதுதல், படித்தல் ஆகியவைகளை மேம்படுத்த பெரிதும் துணையாக இருக்கும் மொழிப்பயிற்றாய்வு கூடமே இத்துறையின் எதிர்கால எதிர்பார்ப்பு. துறை மாணவர்களால் மலர் தயாரித்தல் ஊக்குவிக்கப்படுகின்றது.